Filed under: Uncategorized
http://chumma.posterous.com/it-coupled-named-their-twins
Filed under: pictures
http://www.instantshift.com/2009/02/19/80-strange-and-fantastic-buildings-architecture/
Filed under: comedy

Filed under: Tips
Firmware Checking in Mobile Phones:
Sony Ericsson:
The desktop screen where you have no applications open (meaning no nothing running, just your wallpaper). It may take you to some application but ignore it. continue dialing as below.
Enter >*<<*<* nokia fone:
Manufacturing date and Model check code *#0000#
IMEI Number in your phone:
Sony Ericsson:
*#06#(star,hash, zero, six hash)
முதலில் சொல்லிவிடுவது நலம்: பலருக்கு இது வெறும் நூறு ரூபாய் குற்றம்.
நாடோடி வாழ்க்கையில் இரண்டு மாதம் மின்கட்டணம் கட்டாமல் கிடந்த்து. அதை இன்று காலை கட்டிவிடலாம் என்று வீட்டருகில் இருக்கும் பெஸ்காம்(BESCOM) தன்னியக்க சேவை மையத்துக்கு சென்றேன். இந்த இயந்திரங்கள் வழக்கமாகவே சில ரூபாய் நோட்டுக்கள் பிடிக்காமல் துப்பிவிடும். சில தாள்களை இவை ஏற்காது துப்பிவிடுவது நேர்வதுதான். ஏற்றகாசுக்கு
ஒழுங்காக கணக்கு காட்டும். வழமையாக மின்கட்டணம் கட்டுவது இங்கேதான் என்பதால் கட்டவேண்டிய 626ரூபாய்க்கு கூடவே ஒரு நானுறு ஐநூறு ரூபாய் இருப்புடனே சென்றேன்.எனக்கு முன் வந்த ஒரே ஒருவர் மட்டும் ஒரு காசோலையை அதை ஏற்கவைக்க மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார். வழக்கமாக காசோலைகளை உடனே ஏற்றுக்கொண்டுவிடும்( குறைந்தபட்டசம் இம்மைய இயந்திரம்). அவர் சரி வேலைக்காகாது என்று எனக்கு வழிவிட்டார்.
ஒரு நூறு ரூபாயைக்கூட ஏற்காமல் துப்பிக்கொண்டிருந்தது. மற்றவர் ஐநூறு ரூபாய்த்தாளை கடனாகக் கொடுத்தார்.அதையும் ஏற்கவில்லை. சிறிது நேரம் தாள்களை மாற்றி மாற்றி மல்லுக்கட்டியபோது ஒரு நூறுரூபாய்தாளை ஏற்றுக்கொண்டது. கதையை சுருக்க ஒரு ஐநூறு ரூபாய்த்தாளையும் ஏற்றுக்கொண்டு கணக்கு காட்டியது. அடுத்து ஒரு நூறு
ரூபாயை தின்றுவிட்டு கணக்கு காட்டவில்லை. காலையிலேயை ஆரம்பிச்சாச்சு விவகாரம் என்று நினைத்துக்கொண்டே மனம்தளரா விக்கரமாதித்தனாக அதோடு போராடி பத்து மற்றும் இருபது ரூபாயை ஏற்றிவிட்டு அலுவலைமுடித்தால் ரசீது வரவில்லை.
இவ்வியந்திரம் ஒரு சிறிய அறையின் முன்வாசலில் இருந்தது. அருகில் ஒரு கதவு தாழிடாமல் இருந்ததது. திறந்து உள்ளே சென்றால் இயந்திரத்தின் பின்பகுதியை மூடியவாறு ஒரு சிறு கண்ணாடி அறை. எதுவும் தெரியாமல் இருக்க உட்பக்கமாக Thermocol ஒட்டி வைத்து இருந்தது. கொஞ்சம் உற்று பார்த்தால் ஒரு மனிதனின் கைதெரிந்தது. அறையின் கதவு உட்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. கதவை இருமுறை தட்டினேன் பதிலில்லை. உள்ளிரந்தவன் ஒளிவது தெரிந்தது. வந்த கோபத்தில் விட்டேன் நான்கு உதை.
கதவை சிறிதாக திறந்து ‘ஏனு பேக்கு’ என்றான். இந்தியில் பில் வரவில்லை என்றேன்.திரும்பி இயந்திரத்தை திரும்பி பார்த்தான். கிடைத்த இடைவெளியில் பார்த்தால் இயந்திரம் முழுக்க பிய்த்துபோட்டு திறந்தமேனியாக இருந்தது. அமைதியாக அவன் உட்பக்கமாக கையை விட்டு பில்லை கிழித்து கொடுத்தான். சற்றே கிடைத்த கதவிடுக்கில் கையை வைத்துக்கொண்டு நூறு ரூபாயை தின்று விட்டது என்றேன். ஏனு ஏனு என்று புரியாதவனாக விழித்துவிட்டு இந்தி கொத்தில்லா என்றான்.
‘நனகே கன்னடா பரத்தே’ என்று கன்னடத்துக்கு தாவினேன். இதை முதலில் அவன் எதிர்பாக்க்கவில்லை. திரும்பவும் விளக்க ‘ஒருமணி நேரம் கழித்து வா’ வேறொருவர் வந்து பில்லை சரிபார்ப்பார் என்றான்.
உடனே கதவை விலக்கி அவன் சட்டையை கொத்தாக பிடித்தேன்.அடுத்து அருகிருத்த மின்சார ஸ்விட்சுகளை அணைக்க
முயன்றேன். நெற்றியில் விபூதி கீற்றுடன் அமைதியான முகத்துடன் இருந்தவன் சடக்கென்று சட்டையை பிடித்ததை அடுத்து எதிர்ப்பாக்கவில்லை. நெடுநெடு மாறன்களும் அழுக்கு குலையா ஐடி கம்பெனி காரர்களையும் மட்டுமே பார்த்தவனுக்கு மற்றோர் போலவே போனாப்போகுது என்று விட்டுவிட்டு போய்விடுவேன் என்று நினைத்தான் போலும். பதறிவிட்டான். மிக சிறிய அறையில் அவனை சுவற்றோடு அழுத்தி சட்டையையும் பிடித்ததால் அவனால் நகர முடியவில்லை. சுதாரித்து நான்
அரசாங்க ஊழியன் என்றான். ஐடி கார்டை காட்டு என்றேன். திரும்பவும் ஏதோதோ சொல்ல முயன்றான். அவனை விட்டுவிட்டு வெளியில் இருந்தவரை கூப்பிட்டு போலீசை கூப்பிடுங்கள் என்றேன். திரும்பவும் ஒரு மணி நேரம் என்று ஆரம்பித்தவனை ஒன்று நீ ஐடி கார்டை காட்டு அல்லது இயந்திரத்தை நான் அணைக்கப்போகிறேன் அடுத்து காவல்துறை வரும்
என்றேன்.
திருதிருவென விழித்துவிட்டு நீங்க நெசமாவே நூறு ரூபா போட்டு பில் வரலையா என்றான்.உங்கிட்ட ஐடி கார்ட் இல்லை இனிமே கேள்வி கேட்டால் மண்டையை உடைத்துவிடுவேன் என்றேன். இருங்க வரேன் என்று கண்ணாடி அறையில் நுழைந்தவன் ஒரு நோட்டு புத்தகத்துடன் வந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை குடுத்துவிட்டு ‘நான் இதுல உங்க பில் நம்பரை
எழுதிக்கிறேன். நாங்க அப்புறமா சரி பாக்கறோம். நெசமாவே பணம் இருந்துதுனா பரவாயில்லை இல்லைன்னா நீங்க திரும்பிவந்து இந்த நூறு ரூபாயை குடுங்க என்றான’. ” என்னை இன்னுமாடா பயந்த சொங்கிப்பய என்று நினைச்சுகிட்டு இருக்க” என்ற நினைத்தவறே திரும்பி வந்தேன்.
1. மேல் நடவடிக்கை எடுக்காத காரணம். உள்ளே இருப்பவன் கட்டாயம் திருடன் இல்லை. இதில் யார் யாரோ சம்பந்தப்பட்ட ஒரு குற்ற வலை. பெங்களுரில் எந்த விதமான பின்புலமும் இல்லாத நான் இதை தட்டிக்கேட்பதை விட வேறு வழிகளை பார்ப்பது நலம்.
2. உள்ளூர் மொழி தெரியாமல் அதை கற்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பல இந்திக்காரர்களை உள்ளூர் ஆட்கள் கொள்ளை அடிப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். இலக்கணப்பிழையுடனான சிலபல ஆங்கில மற்றும் இந்தி வார்த்தைகளுமான கன்னடமாக இருப்பினும் பேசத்தெரிந்து இருக்காவிடில் கட்டாயம் வேலைக்கு உதவாது
3. நூறு ரூபாய் தானே திரும்பிவிடலாம் என்றே உண்மையில் முதலில் நினைத்தேன். வெறும் ஐந்துக்கும் பத்துக்கும் சென்னை நகர சாலைகளை கால்களால் தேய்த்த பல நாட்கள் நினைவில் நிழலாடியது. விடத்தோன்றவில்லை.
4. இனிமேல் இணையவழி செலுத்துதலை மட்டுமே செய்வதாக உத்தேசம்.
5. இந்த தளத்தில் போய் அழுதாயிற்று.
Filed under: சுவடு
ஊருக்கே அவர் ஜெயாக்கா தான்.4;30 க்கு எழுந்து டாக்டர் வீட்டுக்கு சொஸைட்டியில் பால் வாங்கி வருவதிலிருந்து பதிணொண்ணோ பன்னிரண்டோ அடிக்கும் வரை வாரம் ஏழு நாட்களும் ஊரெல்லாம் கால்கள் ஓடிக்கொண்டிருக்கும். நாலே நாலு மிக நீண்டதெருக்களுள்ள ஊரில் அவர் வேலை செய்யாத வீடு என்று எதுவும் கிடையாது.
தாலுகாபீஸ் அம்மாவுக்கு வீட்டிலேயே பிரசவத்தின் போது செவிலி வேலை முதல் குழந்தைவளர்ப்பு வேலை. கடைக்காரர் வீட்டில் தினசரி வீட்டு வேலை. மைத்துனரின் ஓட்டலில் பாத்திரம் தேய்க்கும் வேலை இதைத்தவிர ஒரு அலுவலகத்தை பெருக்கும் வேலை இதைத்தவிர அவ்வப்போது அழைக்கும் வேலைகள் என்று வேலை ஓடிக்கொண்டிருக்கும். பொதுவில் ஊர் அவரிடம் மிகவும் அன்பாகவே நடந்துகொண்டது. அல்லது இளம்பருவத்தில அவ்வாறே எனக்குப்பட்டது.
தேவையென்றால் கடன் வாங்கிச்செல்வார் வேறு ஒருவரிடம் கடன் பெற்றோ உழைப்புக்கு முனபணமோ பெற்று அந்தக் கடனை சில வாரங்களில் அடைப்பார். உழைப்பு மட்டுமே மூலதனம். ஒரே கனவு, குறிக்கோள் வகைக்கு இரண்டான தன் நான்கு குழந்தைகளையும் படிக்க வைக்கவேண்டும் என்பதே. பெரியவனுக்கு பத்து வயதிருக்கும். கடைசி பெண்ணுக்கு மூன்று நான்கு வயதிருக்கும்.கணவர் பெரும் குடிகாரர். வேலை எல்லாம் செய்து பார்த்ததே கிடையாது. எப்போதாவது ஜெயாக்கா அம்மாவிடம் தெருவில் போகும் போது நாலு வார்த்தை பேசிவிட்டுப் போவார். அச்சமயம் அடியும் சண்டையும் பற்றி ஓரிரு வார்த்தே சொல்லக்கேட்டு இருக்கிறேன். வேலைக்கு ஆள் வைக்கும் அளவுக்கு எங்கள் வீட்டு பொருளாதாரம் இடம் கொடுத்ததில்லை. ஒருமுறை ஏதோ காரணத்திற்காக வீட்டுக்கு வந்தவர் வீட்டின் ஒரு மூலையில் படுத்து உறங்கிவிட்டார். அவர் திடீரென்று படுத்து தூங்கிட்டார் என்று அம்மாவிடம் போய் சொன்னேன். அம்மா பதறி அடித்து ஓடி வந்து தண்ணீர் தெளித்து எழுப்பி சாப்பிட வைத்தார்கள். மயக்கம் என்ற வார்த்தையும் அதற்கான விளக்கமும் முதல் முறை அப்போது தான் தெரியும். சரியாகப் புரியவில்லை.
மைத்துனர் வைத்திருந்த சிறிய சாப்பாட்டுக்கடையில் கூட வேலை செய்வாரே தவிர சாப்பிட மாட்டார். குழந்தைகளையும் சாப்பிட அனுமதிக்க மாட்டார். அவருக்கு தெரியாமல் கொடுத்தால் தான் உண்டு.
பெரியவன் ஒரு முறை பீடி பிடிக்கிறான் என்று தெரிந்தது அவருக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருந்திருக்கவேண்டும். அடி பின்னி எடுத்துவிட்டார். கணவரைப்போல தன் மகனும் சீரழிந்து விடுவானோ என்று பயந்து விட்டார்.கடன் கொடுத்தவரோ யாரோ என்ன சொன்னார்களோ தெரியவில்லை ஒரு நாள் பெரியவனை தவிர மற்ற மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு வெகு தொலைவில் இருந்த BDO அலுவலக கிணற்றில் தன் இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கி போட்டு விட்டார். என்ன புரிந்ததோ தெரியவில்லை அம்மா செய்வதை பார்த்த இளைய மகன் அங்கேயிருந்து ஓட ஆரம்பித்துவிட்டான். கண்ணெதிரே மகள்கள் இறப்பதையும் பார்த்துவிட்டு கடைசி நமிட பயத்தில் ஆலாய்ப்பறந்து விட்டு கிணற்றில் குதித்துவிட்டார் ஜெயாக்காவும். எதிர்பாரா இடத்தில் சிறுவன் ஓடிவருவதைப்பார்த்த பெரியவர் ஒருவர் பிடித்து கேள்வி கேட்க அவன் சொன்னதைக்கேட்டு ஓடிப்போய் கிணற்றில் குதித்து ஜெயாக்காவையும் குழந்தைகளையும் காப்பாற்றி இருக்கிறார். ஜெயாக்கா மட்டுமே பிழைத்தார். நீதிமன்றத்தில் கொலை செய்யத்திட்டமிட்டது, தற்கொலை முயற்சி, இரண்டு கொலைகள் என்று பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை கொடுத்த அன்று அவருடைய கணவர் தெருத்தெருவாக குடித்துவிட்டு பைத்தியம் பிடித்ததுபோல் ஓடியது இன்றும் நினைவில் இருக்கிறது.அவர் மகன் சில மாதங்களுக்கு பிறகு தற்கொலைக்கு முயன்று சிறவர் சிறைச்சாலையிலோ மனநலகாப்பகத்திலோ சில மாதங்கள் இருந்து விட்டு படிப்பை நிறுத்தி விட்டு வேலை செய்யப்போய்விட்டான்.
சில மாதங்கள் தனிமைச்சிறையில் இருந்து விட்டு பொதுசிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட ஜெயாக்கவை மாதம் ஒருமுறை வேலூர் சிறைக்கு போய் வந்து மனைவி நன்றாக இருப்பதாகவும் இறந்த குழந்தைகளை நினைத்து அழுவதாகவும் மட்டும் தானாகவே சொல்லித்திரிவார் கணவர். குடியை மொத்தமாக நிறுத்திவிட்டதாகவும் எப்போதாவது குடித்துவிட்டு விழுந்து கிடந்ததாகவும் ஊர் சொல்லக்கேள்வி.
காந்தி பிறந்த நாளை உலக மதுஒழிப்பு தினமாக அறிவிக்க இந்திய அரசு கோரி இருந்தது என்ன ஆயிற்றோ தெரியவில்லை.
Filed under: Tips

1. The lace is run straight across the bottom and emerges through both bottom eyelets
2. The laces then go straight up and are fed into the next set of eyelets up the shoe
3. The ends are crossed over and are fed under the vertical lace section on the opposite sides of the shoe before going straight up and into the next set of eyelets up the shoe
4. At the top set of eyelets, the laces can once again cross over and pass under the straight section as shown. This not only looks consistent with the rest of the lacing but also forms a High Lace Lock, which tightens the lacing even more firmly

1. The lace is run straight across the bottom and emerges through both bottom eyelets
2. The ends are looped back under the lace where it feeds under the side of the shoe
3. The ends are then crossed over each other, then they go under and out through the next set of eyelets up the shoe
4. Steps 2 and 3 are repeated until both ends reach the top eyelets.
1. The lace runs straight across the second set of eyelets from the top of the shoe
2. Cross the ends over and feed into the fourth set of eyelets, skipping the third set
3. Continue down the shoe, two sets of eyelets at a time
4. At the bottom, run the laces vertically between the bottom and second from bottom eyelets
5. Double back and work your way back up the shoe through the vacant sets of eyelets.
1. The lace is run straight across the bottom and emerges through both bottom eyelets
2. The left (red) end is spiralled up the left side of the shoe, with the end fed under and emerging from each eyelet
3. The right (orange) lace is spiralled up the right side of the shoe, at each eyelet looping through the left (blue) lace in the middle of the shoe before feeding under and emerging from the next eyelet.
1. The lace is run straight across the bottom and emerges through both bottom eyelets
2. One end of the lace (orange end) runs straight up the right side, is fed into and runs straight across the second set of eyelets
3. Both ends now run straight up the left side, each skipping one eyelet before feeding in two eyelets higher up
4. Continue running both ends across the shoe, then straight up two eyelets at a time
5. At the top of the shoe, the laces end up on the same side and the shoelace knot is tied at that point.
1. The lace runs straight across the bottom and the ends are fed into both bottom eyelets
2. One end of the lace (orange end) runs straight up the right side, emerges from and runs straight across the second set of eyelets
3. The other end (red end) runs diagonally underneath and, skipping the 2nd set of eyelets, emerges from and runs straight across the 3rd set of eyelets
4. Continue running each lace diagonally across and up 2 sets of eyelets until one end (orange in my example) reaches the top right eyelet
5. The other end (red in my example) then runs straight up the left side to emerge from the top left eyelet.
1. The lace runs straight across and emerges from the third set of eyelets from the bottom
2. Both ends run straight down and are fed into the second set of eyelets from the bottom
3. Both ends again run straight down and emerge from the bottom set of eyelets
4. Both ends now run straight up along the outside and are fed into the fourth set of eyelets (the first vacant pair)
5. The ends are crossed over each other, then they go under and out through the next set of eyelets up the shoe
6. Repeat step (5) until both ends reach the top.
1. The lace is run straight across the bottom and is fed into rather than emerging from both bottom eyelets
2. The ends are crossed over, then inserted into the next set of eyelets up the shoe
3. This process is repeated until both ends reach the top eyelets and end up inside.
1. The lace runs straight across the bottom and emerges through both bottom eyelets
2. Skipping two sets of eyelets, cross the ends over and feed into the fourth set of eyelets
3. Both ends now run straight down one eyelet and emerge from the third set of eyelets
4. Continue up the shoe, each time crossing over and going up three sets of eyelets, then straight down to emerge from the next set of eyelets below.

1. The lace is run straight across the bottom and emerges through both bottom eyelets
2. The ends are twisted together with one complete twist in the middle of the shoe
3. The ends then continue across to the opposite sides, where they go under and out through the next set of eyelets up the shoe
4. This process is repeated until both ends reach the top eyelets.

1. The lace runs straight across the bottom and emerges from both bottom eyelets
2. Cross the ends over and feed into the 4th set of eyelets up the shoe (skip past 2 sets of eyelets)
3. Both ends now run straight up and emerge from the 5th set of eyelets
4. Cross the ends over and feed into the 2nd set of eyelets up the shoe (skip past 2 sets of eyelets)
5. Both ends now run straight up and emerge from the 3rd set of eyelets 6. Cross the ends over, feed under and emerge from the top set of eyelets (skip past 2 sets of eyelets).
1. The lace is run diagonally and emerges from the bottom left and the top right eyelets
2. The top (red) end of the lace is zig-zagged from the top set of eyelets down to the middle eyelets in a similar manner to the Shoe Shop Lacing
3. The bottom (orange) end of the lace is similarly zig-zagged from the bottom set of eyelets up to the middle eyelets.
1. Start with two pairs of different colour laces, preferably the wide, flat variety (I was lucky to receive two such pairs with my last runners!)
2. With one colour (orange in my example), lace the shoe using either Straight (Fashion) or Straight (Lazy) Lacing
3. With the other colour (red in my example), start at the bottom of the shoe and weave the lace in and out of the other lace until you reach the top
4. Fold around the top lace and head back down, weaving out and in until you reach the bottom 5. Continue across the shoe until you’re out of room or out of lace, whichever comes first
6. Tuck all the loose ends of the laces into the shoe.
1. The lace runs straight across the bottom and emerges from both bottom eyelets
2. Cross the ends over and feed into the 4th set of eyelets up the shoe (skip past 2 sets of eyelets)
3. Both ends now run straight up and emerge from the 5th set of eyelets
4. Cross the ends over and feed into the 2nd set of eyelets up the shoe (skip past 2 sets of eyelets)
5. Both ends now run straight up and emerge from the 3rd set of eyelets
6. Cross the ends over, feed under and emerge from the top set of eyelets (skip past 2 sets of eyelets).
சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட ‘கற்றபின் நிற்க’ முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் ‘ஆறுவது சின’மோ ‘பொறாமைப்படாதேயோ’ இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை.
தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும் ஈடுஇணையற்றவை. அம்புலிமாமாவைப்பொருத்தவரை அதன் அரசர் காலத்துக்கதைகளும், ‘மண்டை வெடிக்க வைக்கும்’ வேதாளத்தின் புதிர்கள் மிகவும் பிடித்தமானவை.
இவை இருந்தாலும் மிகவும் பிடித்தது கோகுலம். இதில் கடிதம் எழுதிப்போட்டு கருத்து சொல்வது(அப்போவே ஆரம்பிச்சாச்சு), உறுப்பினர் அட்டை வாங்கி நண்பர்களிடம் காண்பிப்பது என்று இருந்தது மேலாண்மையில் Cult marketing பற்றி எழுதும்போது Case studyக்கு உதவியது.
கோகுலத்தில் வரும் 16பக்க வண்ணப்படக்கதை இப்போதும் வருகிறதா என்று தெரியவில்லை. வீட்டுக்கே வரும் இதழுக்காக பொறுக்காமல் மாதாமாதம் எப்போது வரும் என்று கடைக்கே சென்று கேட்டு நச்சரித்ததும் இனிய நாட்கள்(கடைக்காரருக்கல்ல). அநியாயத்துக்கு காசு கேக்கறாங்க இப்போ. அப்போவே விற்பனை குறைவுன்னு புலம்புவாங்க அப்படி இருக்கையில் இலவசமா கொடுத்தா கொஞ்சம் விளம்பர வருவாயாவது வரும்.(கருத்து !!)
சரி இப்போ எதுக்கு இந்த ஊதுவத்தி சுற்றல்? வழக்கம் போல வெட்டியா இணையத்தை மேயந்த போது அம்புலிமாமா சிக்கியது. யாருக்காவது தெரியாமல் இருந்தா உதவட்டுமேன்னு ஒரு ‘அறம் செய்ய விரும்பு’னதுதான்.
இணையத்தை பத்துவைத்துவிட்டு இன்று மெதுவாக
கூகிளாண்டவர் கடைசியில் ஒத்துக்கொண்டுவிட்டார். ஓய்ந்துபோயிருந்த இணைய உலவிச்சண்டையை ஆளுக்கு பாதியாக IEயும் FFம் பிரித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவரும் இவ்வினிய காலத்தில் குட்டையைக் குழப்ப கூகிள் தன்னுடைய Chrome எனும் உலவியை நாளை வெளியிடுகிறது.
சில முக்கிய அம்சங்களாவன
1. திறந்தவூற்று மென்பொருள்
2. முக்கமுழுக்க புதிதாக Javascript VM ஒன்றை v8 எனும் புதிய இயங்கி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்(மற்ற உலவிகளில் இதை வேண்டுமெனில் சேர்த்துக்கொள்ளலாம்.
3. ஒரே ஒரு tabஐ மட்டும் மிகுந்த கட்டுப்பாடுடன் இயக்கமுடியும். அதாவது அதில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கும் தொட்ர்பு கொண்ட வழங்கிக்கி மட்டுமே அறியமுடியும். இதனால் கடவுச்சொல் திருட்டு, உங்களுக்கு தெரியாமல் கணினியில் மென்பொருள் நிறுவுவது, கடனட்டை விவரத்தை திருடுவது போன்றவை திருடாமல் தடுப்படும்.
4. மிகமுக்கியமாக ஒவ்வொரு tabம் ஒரு தனிஉலவிபோல் செயல்படும் அதாவது ஒரு tab சிதைந்தாலோ இயங்காமல் நின்று போனாலோ அல்லது மென்பொருள் இடியாப்பச்சிக்கலில் செயலிழந்தாலோ எல்லாம் சிதையாது. சுருங்கச் சொல்லின் முன்பு browsers=> tabbed browsers என்று இருந்தது இனி browsers in tab என்றாகிறது.
5. webkitஐ அடிப்படையாக கொண்டு இயங்குவதால் வன்பொருள் சார்பின்றி கையடக்க கருவிகளிலும் வம்பின்றி இயங்கும்.
6. ஒரு தொடக்க பக்கத்தில் நீங்கள் அடிக்கடி செல்லும் பக்கங்களை நினைவில் வைத்து ஒரு சிறு சுவரொட்டி போல கொடுக்கப்போகிறது. (இதை operaவில் பார்த்திருக்கிறேன்.)
7. FF, Opera, IE போன்றவற்றின் நல்ல சங்கதிகளை உருவிய புதிய மொந்தை இது.
8. API களை இதோடு தருவதால் புதிய உலவிசார் மென்பொருட்களை உருவாக்க வழிவகுக்கிறது.
9. மிக அதிக வேகத்தில் இயங்கும் என்று கூகிள் உறுதி அளிக்கிறது.
10. உலவிகளுக்கென்று இதுவரை கட்டுப்பாடு கொண்ட வழிமுறைகள்(standards) இருந்ததில்லை இதன்மூலம் சில வழிமுறைகள் உருவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
11. மெருகேறிய நினைவக குப்பை கூட்டலையும்(garbage collection
) சரி பண்ணி இருக்கிறது. கட்டாயம் நினைவக கசிவு இருக்காது என்று சத்தியம் செய்கிறது. பார்ப்போம்.
Geckoவிற்கும் Webkitக்கும் இருந்த போட்டி இந்த முறை webkitக்கு போகும் என்று நினைக்கிறேன். FFக்கு கடும் போட்டியை இது உருவாக்கப்போகிறது.
அடிப்படையில் இருந்த ஓட்டை உடசல்கள் சிலதை சரி செய்து இருக்கிறது.
சில புதிய சிக்கல்களை உருவாக்காமல் இருந்தால் சரிதான்
***
உரிமைத்துறப்பு மற்றும் இன்னபிற
* தலைப்பை வேறு எதோ பதிவில் எப்போதோ பாத்த நினைவு. யாராவது காப்புரிமை எடுத்திருந்தால் அடிக்க வராதீர்.
*மேலதிக விவரங்கள் இணையத்திலும், இங்கும், கூகிள் புத்தகத்திலும்.
*இன்னும் நிறைய சங்கதிகளை மற்ற பதிவுகளில் விவரமறிந்தோர் இன்னும் விவரமாக எழுதுவார்கள்
)














